லூவிஸ் ஹமில்டன் (Lewis Hamilton) ஒட்டுமொத்த சம்பியனானார்

போர்மியூலா வன் காரோட்டத்தின் இவ்வருடத்துக்கான க்றோன்ப்றீயில், பிரித்தானியாவின் லூவிஸ் ஹமில்டன் (Lewis Hamilton) ஒட்டுமொத்த சம்பியனானார்.

போர்மியூலா வன் காரோட்டத்தில் அவர் ஒட்டுமொத்த சம்பியன் பட்டம் வெல்லும் ஐந்தாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

21 கட்டங்களைக் கொண்ட போர்மியூலா வன் காரோட்டத்தின் 20ஆம் கட்டமாக பிரேஸில் க்றோன்ப்றீ நடத்தப்பட்டது.

சாவோ போலோ ஓடுபாதையில் நடைபெற்ற பந்தயத்தில் பிரித்தானியாவின் லூவிஸ் ஹமில்டனுக்கும் நெதர்லாந்தின் மார்க் வெட்சபனுக்குமிடையில் கடுமையான சவால் நிலவியது.

71 சுற்றுவட்டங்களைக் கொண்ட பந்தயத்தை லூவிஸ் ஹமில்ட்டன் 1 மணித்தியாலம் 27 நிமிடங்கள் மற்றும் 9.060 செக்கன்களில் கடந்தார்.

இவ்வருடத்திற்கான க்றோன்ப்றீயில் இரு கட்டங்கள் எஞ்சியிருந்த நிலையிலேயே லூவிஸ் ஹமில்டன் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லூவிஸ் ஹமில்ட்டனை விட 12.469 செக்கன்கள் பின்தங்கிய மார்க் வெட்சபன் இரண்டாமிடத்தை அடைந்தார்.

பின்லாந்தின் கிமி ரெய்கொனன் மூன்றாமிடத்துக்கு தகுதியானார்.

பிரேஸில் க்றோன்ப்றீயில் ஆறாமிடத்தை பெற்ற ஜேர்மனியின் செபஸ்தியன் வெட்டல், இவ்வருட பந்தயத்தில் 20 கட்டங்களின் முடிவில் இரண்டாமிடத்தில் நீடிக்கிறார்.

போர்மியூலா வன் காரோட்டத்தின் 21 ஆவது கட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி அபுதாபியில் நடைபெறவுள்ளது.

Sharing is caring!