வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஆசிய கோப்பையில் இருந்து விலகல்

வங்கதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி கேப்டனான ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன், நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

2018 ஆசிய கோப்பை போட்டி வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை யுனைடெட் அரபு அமீரகத்தில் நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் இருந்து நம்பர் ஒன் ஒருநாள் ஆல்-ரவுண்டர் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் விலகி இருக்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் ஜிம்பாப்வே, இலங்கை அணிகளுடன் பங்கேற்ற முத்தரப்பு போட்டியில் ஷகிபிற்கு இடதுகை விரலில் காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக, இலங்கைக்கு எதிரான தொடரிலும் அவரால் பங்கேற்க முடியவில்லை.

ஷகிப் காயத்துக்கு அறுவை சிகிச்சை நடக்க இருப்பதால், ஆசிய கோப்பை போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Sharing is caring!