வருமான வரி ஏய்ப்பு… ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை

மாட்ரிட்:
வருமான வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் சமரச தீர்வு செய்து கொண்டதால் 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.148 கோடி அபராதம் செலுத்துகிறார் ரொனால்டோ.

போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஸ்பெயினில் ரியல்மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
இதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ரொனால்டோ ஸ்பெயின் அரசுக்கு முறையான வருமான வரி செலுத்தாததால் வரிஏய்ப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதையறிந்த ரொனால்டோ, வருமானவரித்துறையுடன் சமரச தீர்வு செய்தார். அதன்படி வரி ஏய்ப்பு செய்ததை ஒப்புக்கொண்டு 2 ஆண்டு சிறை தண்டனையுடன், ரூ.148 கோடி அபராதம் செலுத்தவும் சம்மதித்ததாக கூறப்படுகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!