வாய்ப்பில்லை…புவனேஸ்கர் விலக வாய்ப்பில்லை

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார்.

இங்கிலாந்தில் மூன்றுவிதமான கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க இந்தியா சுற்றுப்பயணம் செய்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான குறுகிய ஓவர் போட்டியின் சில ஆட்டங்களில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் பங்கேற்றார். ஆனால், முதுகு காயம் காரணமாக பெரும்பாலான போட்டிகளில் இருந்து அவர் விலகினார்.

மேலும், முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியிலும் புவனேஸ்வர் இடம் பெறவில்லை. இதற்கு விளக்கம் அளித்த பிசிசிஐ அவர், மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்த பின், கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்படும். அப்போது புவனேஸ்வர் உடற்தகுதி பெற்றிருந்தால், கடைசி இரண்டு போட்டிகளில் அவர் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்தது.

பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி மற்றும் நாட்டிங்காமில் இருந்து வெளியாகியுள்ள தகவலில், புவனேஸ்வர் குமார் காயத்தில் இருந்து மீண்டு வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, ட்ரென்ட் பிரிட்ஜில் நாளை (18ம் தேதி) துவங்குகிறது.

Sharing is caring!