வார்னர் மரண அடி: வங்கதேசத்திற்கு வெற்றி இலக்கு எவ்வளவு தெரியுமா?

உலகக்கோப்பை தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேசத்திற்கு 382 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பின்ச், வார்னர் வங்கதேச பவுலர்களின் பந்துவீச்சை நாலபுறமும் சிதறடித்தனர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன்களை சேர்த்தது. அதிரடியாக ஆடிய பின்ச் அரைசதம் அடித்து 53 ரன்னில் சர்கார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதற்கடுத்து, கவாஜா களமிறங்க, ஒருபக்கம் அரைசதம் அடித்த வார்னரின் அதிரடி தொடர்ந்துகொண்டே இருந்தது. 110 பந்தில் வார்னர், நடப்பு உலகக்கோப்பையில் 2-ஆவது சதத்தை பதிவு செய்தார். இன்னொரு பக்கம் கவாஜா அரைசதம் அடித்தார்.

இருவரும் தொடர்ந்து அதிரடியாக ஆடி வர, அணி ஸ்கோர் மளமளவென ஏற, 150 ரன்களையும் வார்னர் தொட்டார். வார்னர் ஒருநாள் போட்டியில் 6-ஆவது முறையாக 150 ரன்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வார்னர் 166 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சர்கார் பந்தில் ஆட்டமிழந்தார். கவாஜா – வார்னர் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 192 ரன்களை சேர்த்தது. இந்த ஜோடி பிரியும்போது அணியின் ஸ்கோர் 44.2 ஓவர்களுக்கு 313 ரன்கள் என இருந்தது.

இதையடுத்து, களமிறங்கிய மேக்ஸ்வெல் ருத்ரதாண்டவம் ஆடி, 10 பந்தில் 32 ரன்கள் அடித்து மெர்சல் காட்டி, ரன் அவுட் ஆனார். பின்னர், ஸ்டோயினிஸ் களமிறங்கினார். 89 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சர்கார் பந்துவீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதற்கடுத்து, களமிறங்கிய ஸ்மித் 1 ரன்னுடன் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்ப, அடுத்து கேரி களமிறங்கினார். ஆஸ்திரேலியா 49 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 368 ரன்கள் எடுத்திருந்த  நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டு, சிறிது நேரத்தில் ஆட்டம் தொடங்கப்பட்டது.

இறுதியில், 50 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 381 ரன்களை குவித்து, வங்கதேசத்திற்கு வெற்றி இலக்காக 382 ரன்களை நிர்ணயித்துள்ளது. கேரி 11, ஸ்டோயினிஸ் 17 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தனர்.

Sharing is caring!