வாழ்வா சாவா நிலையில் ஜெர்மனி : தென்கொரியாவுடன் இன்று பலப்பரீட்சை

உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்றைய ஆட்டத்தில் எப் பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் வாழ்வா சாவா நிலையில் தென் கொரியாவுடன் ஜெர்மனி மோதுகிறது. இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்து வெளியேறும் நிலையில் உள்ள தென் கொரியா ஜெர்மனியை சந்திக்கிறது. நடப்பு சாம்பியனான ஜெர்மனி, இதுவரை 1954, 1974, 1990, 2014 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை உலகக் கோப்பையை வென்றது.

13 அரை இறுதிகள், 8 இறுதிப் போட்டிகளை சந்தித்துள்ளது. ஐந்தாவது முறையாக உலகக் கோப்பையை வென்று, பிரேசில் சாதனையை சமன் செய்யும் முனைப்புடன் களமிறங்கியது. இன்று நடக்கும் ஆட்டத்தில் ஜெர்மனி வென்றாலும் அடுத்தச் சுற்றுக்கு சுலபமாக முன்னேற முடியாது.

இன்று நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் மெக்சிகோவை ஸ்வீடன் வென்றால், மூன்று அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் இருக்கும். கோல் வித்தியாசத்தில்தான் அடுத்தச் சுற்றுக்கு நுழைவது யார் என்பது தெரிய வரும்.

அதனால் அதிக கோல்களில் வென்றாக வேண்டிய நிலையில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்ளது.

இந்த அணியின் மூச்சு என்று கருதப்படும் தாமஸ் முல்லர், ஜெரோம் போட்டெங், மட்ஸ் ஹம்மல்ஸ், ஷமி கெதிரா, மெசூட் ஓஸ்வில், தாமஸ் முல்லர், டோனி க்ரூஸ், துடிப்பான இளம் வீரர்கள் ஜோஸ்வா கிம்மிச், டிமோ வெர்னர் ஆகியோர் திறமையை காட்ட வேண்டிய சூழல் உள்ளது.

இதே போல மற்றொரு ஆட்டத்தில் மெக்சிகோ, ஸ்வீடன் மோதுகின்றன. அடுத்த சுற்றுக்கு முன்னேற இன்றைய ஆட்டத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஸ்வீடன் உள்ளது.
அதே சமயம் ஸ்வீடன் மெக்சிகோவை தோற்கடித்தால் அதன் பிறகு ஜெர்மனி, மெக்சிகோ, ஸ்வீடன் ஆகிய அணிகள் தலா 6 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது கோல் விகிதாச்சாரம் அடிப்படையில் இரண்டு அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கும்.

ஸ்வீடன் தோல்வியை தழுவினால் மட்டுமே ஜெர்மனிக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்கும் என்கிற இடியாப்ப சிக்கலில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது நடப்பு சாம்பியனான ஜெர்மனி .

.

Sharing is caring!