விமர்சனங்களுக்கு பதிலடி… தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பன்ட் !
இந்திய விக்கெட் கீப்பர்களில் குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து புதிய சாதனையை ரிஷப் பன்ட் படைத்துள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தியா இந்தப் போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடி வருகின்றன.
இதனிடையே, சமீபக்காலமாக ரிஷப் பன்ட்-ன் ஆட்டம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. ஆனால் தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தியுள்ளார்.
பிரிஸ்பேஸ் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரஹானே அவுட்டானதும் பேட் செய்ய வந்த ரிஷப் பன்ட், தனது 1000 ரன்களை கடந்தார். அவர் இந்தச் சாதனையை 27 இன்னிங்ஸில் செய்துள்ளார். இதன் மூலம் அவர் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
இதற்கு முன்பு இந்திய விக்கெட் கீப்பர்களில் தோனி 32 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்தார். இப்போது குறைவான இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.