விம்பிள்டன் சாம்பியன் ஆனார் ஜோகோவிச்

இங்கிலாந்து:
தட்டிச் சென்றார்… தட்டிச் சென்றார் விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்.

கெவின் ஆண்டர்சனை நேர்செட் கணக்கில் வீழ்த்தி விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச். விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது.

இதில் 8-ம் நிலை வீரரான கெவின் ஆண்டர்சன் – 12-ம் நிலை வீரரான ஜோகோவிச் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். பெடரர், இஸ்னெரை கடும் போராட்டத்திற்குப் பின் வீழ்த்திய ஆண்டர்சன் இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

முதல் இரண்டு செட்டுகளையும் 2-6, 2-6 என இழந்தார். 3-வது செட்டில் சற்று வேகம் காட்டினார் ஆண்டர்சன். இதனால் ஆட்டம் ‘டைபிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் ஜோகோவிச் 7(7)-6(3) என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!