விராட் கோலியின் 23வது சதம்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது அவரது 23வது சதமாகும்.

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 3வது டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்கள் குவித்தது.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 161 ரன்னில் ஆல் அவுட்டானது.169 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடினார். அவர் 191 பந்தில் 10 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார்.

நடப்பு தொடரில் விராட் கோலி அடிக்கும் 2வது சதம் இதுவாகும். மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் விராட் தனது 23வது சதத்தை பதிவு செய்துள்ளார். அத்துடன்சேவாக் உடன் 4வது இடத்தை பகிர்ந்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 51 சதங்களுடன் முதல் இடத்திலும், 36 சதங்களுடன் ராகுல் டிராவிட் 2வது இடத்திலும், 34 சதங்களுடன் கவாஸ்கர் 3வது இடத்திலும் உள்ளனர்.

முன்னதாக இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் கோலி 97 ரன்களில் விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!