விராட் கோலியும் சினிமாவில்….

சமீபகாலமாக பல விளையாட்டு வீரர்களும் சினிமாத்துறைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பல பிரபல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையும் படமாகி வருகின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியும் விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

அதோடு, அதிகப்படியான ரசிகர்களை வைத்துள்ள இவரும் சினிமாவில் நடித்து வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில், இன்று தனது டுவிட்டரில் ஒரு பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் விராட்.

படத்தின் பெயர் ‘டிரைலர் – தி மூவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கும் மேல் விராட் கோலி சூப்பர் ஹீரோ போன்று ஆக்ரோஷமாக தோன்றுகிறார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு அவதாரம் என்று பதிவிட்டிருக்கும் விராட், டிரைலருக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!