விராட் கோலியை கேலி செய்ய இங்கிலாந்து ரசிகர்கள்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி கேப்டன் மற்றும் வீரர்களை, இங்கிலாந்து ரசிகர்கள் கேலி செய்து கோஷமிடும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எட்க்பாஸ்டனில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 31 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. இதன் மூலம், மீண்டும் எட்க்பாஸ்டன் மண்ணில் சாதனை படைக்க தவறியது இந்தியா. வெற்றியின் விளிம்பிற்கு வந்தும் இந்தியா தோல்வி அடைந்தது பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

இந்த நிலையில், இந்திய வீரர்களின் பேருந்துக்கு முன் இங்கிலாந்து ரசிகர்கள், அவர்களை கேலி செய்து கூச்சலிடும் வீடியோ வெளியாகி உள்ளது. “கோலி எங்கே, எங்களிடம் ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்ளார்” என்ற கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக, முதல் இன்னிங்சில் விராட் சதமடித்த பிறகு பாரத் ஆர்மி, “எங்களிடம் கோலி இருக்கிறார். நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர் தோனியின் பிள்ளை. பாகிஸ்தானை துவம்சம் செய்தவர்” என்று குறிப்பிட்டு ஆரவாரம் செய்திருந்தனர்.

Sharing is caring!