விளையாடும் வாய்ப்பை, வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் இழந்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பை, வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் இழந்துள்ளார்.

இடதுகாலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே, இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பை அவர் இழந்துள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவன தலைவர் அணியுடனான இரண்டு நாள் பயிற்சி போட்டியின்போது நுவன் பிரதீப் உபாதைக்கு உள்ளானார்.

அவருக்குப் பதிலாக அணியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள வீரர் யார் என்பதை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதுவரை அறிவிக்கவில்லை.

Sharing is caring!