வீராங்கனை சிந்து,  காந்த் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றிபெற்றனர்

கவ்லூன்: ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து,  காந்த் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றிபெற்றனர். சாய்னா ஏமாற்றம்  அளித்தார்.   சர்வதேச ஓபன் பேட்மின்டன் போட்டி ஹாங்காங்கின் கவ்லூன் நகரில் நடந்து வருகிறது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல்சுற்று ஆட்டத்தில்  இந்திய நட்சத்திர வீராங்கனை சிந்து, தாய்லாந்தை சேர்ந்த நிட்சான் ஆகியோர் பலப்பரிட்சை நடத்தினர். இருவரு சிறப்பாக விளையாடியதால், ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. முதல் செட்டில் சிந்துவும், 2வது செட்டில் நிட்சானும் ஆதிக்கம் செலுத்தினர்.

இறுதி  செட்டை சிந்து கைப்பற்றினார். இந்நிலையில், 21-15, 13-21, 21-17 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றிபெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-10, 10-21, 19-21 என்ற செட் கணக்கில் ஜப்பானை சேர்ந்த அகானே யமாகுஷியிடம்  தோல்வியடைந்து வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாய்னா தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. காந்த் வெற்றி: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில், இந்திய வீரர் காந்த் 21-11, 21-15 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீரர் வின்சென்டை  வெற்றி கொண்டார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-17, 21-14 என்ற நேர்செட்டில் தாய்லாந்து வீரர் சுப்பான்யுவை வீழ்த்தினார்.    மற்றொரு போட்டியில், இந்திய வீரர் சாய் பிரனீத் 21-16, 11-21, 15-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்து வீரர் கோசித் பெட்ராடாப்பிடம் தோல்வியடைந்தார்.

இந்திய  வீரர் காஷ்யப், இந்தோனேஷிய வீரர் அந்தோணி ஆகியோர் இடையே நடந்த ஆட்டத்தில்   16-21, 13-21 என்ற நேர்செட்டில் காஷ்யாப் தோல்வி அடைந்தார்.

Sharing is caring!