வெறித்தனமான ரசிகர் ஒருவர் WWE வீராங்கணையொருவரின் வீடு புகுந்து அவரை கடத்த முயற்சித்த பரபரப்பு சம்பவம் !

வெறித்தனமான ரசிகர் ஒருவர் WWE வீராங்கணையொருவரின் வீடு புகுந்து அவரை கடத்த முயற்சித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து, அந்த வெறித்தன ரசிகரிடமிருந்து பாதுகாப்பு கோரி அந்த வீராங்கணை நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

WWE சூப்பர் ஸ்டார் சோனியா டெவில்லை கடத்த சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சோனியா டெவில் என்ற பெயரில் WWE போட்டிகளில் கலந்து கொள்பவர் டாரியா பெரெனாடோ. அவரை கடத்தி வருவதற்காக தென் கரோலியாவிலிருந்து புளோரிடாவிற்கு சென்றுள்ளார் 24 வயதான பிலிப் தோமஸ் என்ற வெறித்தனமான ரசிகர்.

இப்பொழுது அவர் மீது ஆயுதக் கடத்தல், ஆயுதக் கொள்ளை, கடத்தல் முயற்சி மற்றும் கிரிமினல் குறும்பு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

பெரெனாடோவை கடத்த அவர் 8 மாதங்களாக திட்டமிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடத்தல் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.  பெரெனாடோவின் வீட்டிற்கு வெளியே நீண்டநேரமாக உட்கார்ந்திருந்து விட்டு, கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றுள்ளார்

Sharing is caring!