வெற்றி முனைப்பில் இங்கிலாந்து!

இலங்கை அணிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றியொன்றை பெறும் தீவிரத்தில் இங்கிலாந்து அணி கப்டன் ஜோ ரூட் ஆடி வருகிறார். அவர் வேறு ஒரு மூட்டில் இருப்பதாக தெரிகிறது.

நாளையோ, நாளை மறுநாளோ அனேகமாக இந்த ஆட்டம் முடிந்து விடவே வாய்ப்புண்டு. இலங்கையர்கள் ஏதாவது ஆச்சரியம் நிகழ்த்தினால் மட்டுமே ஆட்டம் நீடிக்கும்.

இலங்கை- இங்கிலாந்து அணிகளிற்கிடையிலான முதல் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 320 ஓட்டங்களை குவித்துள்ளது.

6 விக்கெட் கைவசம் இருக்க, 185 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

அணித் தலைவர் ஜோ ரூட் மிரட்டல் ஃபோர்மில் ஆடி வருகிறார். 254 பந்துகளில் 12 பௌண்டரிகளுடன் 168 ஓட்டக்ளுடன் களத்தில் இருக்கிறார்.

ஜொனி பரிஸ்டோ 47 ஓட்டங்களுடனும், லோரன்ஸ் 73 ஓட்டங்களுடனும் இன்று ஆட்டமிழந்தனர்.

எம்புல்தெனிய 3, தில்ருவான் பெரேரா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

Sharing is caring!