வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் !

வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் இடம் பிடித்துள்ளார்.

வெஸட் இண்டீஸில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூத்த கிரிக்கெட் வீரரான கிறிஸ் கெய்ல்,  நிக்கோலஸ் பூரன் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். உடலநலக்குறைவு காரணமாக சாமவேல்ஸ் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ் கெய்லுக்கு வயது 39. இவர்  284 ஒருநாள் போட்டிகளில் 23 சதம், 49 அரைசதங்களுடன் 9727 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்காளதேசத்திற்கு எதிராக விளையாடினார். அதற்குப் பின்னர், தற்போதுதான் ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ளார்.

Sharing is caring!