வெஸ்ட் இண்டீஸ் டோட்டல் வேஸ்ட்…. இறுதியில் இலங்கையிடமும் தோல்வி!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸை இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில்
வென்றது. இதன் மூலம் அந்த அணி, 8 புள்ளிகளுடன் பட்டியலில் ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்தின் ரிவர்சைட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுதது பேட்டிங் செய்த இலங்கை அணி, வீரர்கள் இத்தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் வேகப்பந்து, சுழற்பந்து என எல்லாவற்றையும் சகட்டுமேனிக்கு அடித்து விளாசினர் இலங்கை அணி பேட்ஸ்மேன்கள், அதன் பயனாக 50 ஓவர்களின் முடிவில் இலங்கை ஆறு விக்கெட் இழப்புக்கு 338 ரன்களை குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக, அவிஸ்கா பெர்ணான்டோ 104 ரன்களும், பெரேரா 64 ரன்களும் எடுத்தனர்.

339 ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்குடன், களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், இப்போட்டியில் ஜெயிக்காவிட்டாலும், படுதோல்வி அடைந்துவிடக்் கூடாது என்பதே அந்த நாட்டு ரசிகர்களின் விருப்பமாக இருந்திருக்கூடும்.

அதன்படியே, வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களும் வெற்றிக்காக கடுமையாக போராடினர். இருப்பினும், 50 ஓவர்களில் அவர்களால் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 315 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து, 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் -118, ஃபேபியன் ஆலன் -45, கிறிஸ் கெயில் 35 ரன்களை எடுத்தனர்.

Sharing is caring!