வேர்ல்டுகப் கிரிக்கெட் : விஜய் சங்கருக்கு பதிலாக இன்று களமிறங்கியுள்ள இளம் வீரர் இவர் தான்!

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் உள்ள எட்பாஸ்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ரிஷப் பண்ட் முதல்முறையாக களமிறங்குகிறார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர் விளையாடும் முதல் போட்டியும் இதுவேயாகும்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவானுக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இடதுகை ஆள்காட்டி விரலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. இதனால், உலகக்கோப்பை தொடரிலிருந்து அவர் வெளியேற வேண்டியதானது.

இதையடுத்து அவருக்கு பதிலாக, தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த வாய்ப்பை அவர் சரிவர பயன்படுத்தி கொள்ளவில்லை எனக் கூறி, இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் விஜய் சங்கருக்கு பதிலாக, இளம்வீரர் ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டுள்ளார்.

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான தமது முதல் ஆட்டத்தில், தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி, விஜய் சங்கர் சாதனை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!