ஸ்டார்க்கை திணறவிட்ட போல்ட் ஹாட்ரிக்: நியூசி.,க்கு 244 ரன்கள் டார்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 244 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வார்னர் 16, பின்ச் 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இவர்களை தொடர்ந்து, ஸ்மித் 5, ஸ்டோனியிஸ் 21, மேக்ஸ்வெல் 1 ரன்னில் ஆட்டமிழந்து, 92 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது.

பின்னர், கவாஜா, கேரியின் பொறுப்பாக ஆடினர். இருவரும் அரைசதம் எடுத்து சிறப்பாக ஆடி வந்த நிலையில், கேரி 71 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரை வீசிய போல்ட், கவாஜா 88, ஸ்டார்க் 0, பெக்ரென்டார்ப் 0 ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். நடப்பு உலகக்கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த 2-ஆவது வீரர் என்ற பெருமையை போல்ட் பெற்றுள்ளார். முதல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை ஆப்கான் அணிக்கு எதிரான போட்டியில் ஷமி எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!