ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்ட மிட்சல் ஸ்டார்க்! கடைசி கட்டத்தில் பொளந்து கட்டிய ஜடேஜா!!

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் ஜடேஜா கடைசி கட்டத்தில் ருத்ரதாண்டவம் ஆட இந்திய அணி 161 ஓட்டங்கள் குவித்தது.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி இன்று கர்பென்னாவில் நடைபெற்று வருகிறது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. அதன் படி முதலில் ஆடிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர்.

இதில் துவக்க வீரரான ஷிகர் தாவனை தன்னுடைய துல்லியமான யார்க்கர் மூலம் ஸ்டெம்பை தெறிக்கவிட்டு ஸ்டார்க் வெளியேற்றினார்.

அதைத் தொடர்ந்து வந்த கோஹ்லி 9 ஓட்டங்களிலும், சஞ்சு சாம்சன் 23 ஓட்டங்களிலும் வெளியேற, தனி ஒருவனாக கே.எல்.ராகுல் அவுஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு விளையாடி வந்தார்.இருப்பினும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாண்ட்யா 16 ஓட்டங்களில் நடையை கட்ட, பின்னரே கே.எல்.ராகுல் 51 ஓட்டங்களில் பெளவிலியன் திரும்ப, இந்திய அணி ஒருகட்டத்தில் 150-ஐ தாண்டுமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், நான் இருக்கிறேன் என்பது போல் ஜடேஜா தனி ஒருவனாக கடைசி கட்டத்தில் அவுஸ்திரேலியா அணியின் பந்து வீச்சை பொளந்து கட்டினார். இதனால் 150-ஐ தாண்டுமா என்று இருந்த இந்திய அணி, இறுதியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்தது.

ஜடேஜா கடைசி வரை ஆட்டமிழக்காமல், 44 ஓட்டங்கள் குவித்தார்.

Sharing is caring!