ஸ்டோக்ஸ் குற்றவாளி இல்லை….மீண்டும் இங்கிலாந்து அணியில்…

பிரிஸ்டல் தகராறு வழக்கில் பென் ஸ்டோக்ஸ் குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் தீர்பளித்ததை தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் இடம் பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு பிரிஸ்டல் நைட்கிளப்பிறகு வெளியே இருவருடன், இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் ஸ்டோக்ஸ் தகராறில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஸ்டோக்ஸ் கைது செய்யப்பட்டு உடனடியாக விடுவிக்கப்பட்டார். இருப்பினும் விசாரணை நடந்து கொண்டு வந்தது. இந்த நிலையில், 11 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு நேற்று முடிவுக்கு வந்தது. கடந்த ஒரு வரமாக கிரௌன் கோர்ட்டில் நடைபெற்ற இவ்வழக்கில், ஸ்டோக்ஸ் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனால் ஸ்டோக்ஸ், இங்கிலாந்து அணிக்காக விளையாட இருந்த பெரும் சிக்கல் விளங்கியுள்ளது. இதனிடையே, இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில், ஸ்டோக்ஸ் இடம் பிடித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ், 6 விக்கெட் வீழ்த்தினார். அந்த போட்டியில் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ், விசாரணை காரணமாக பங்கேற்கவில்லை. அந்த ஆட்டத்திலும் வெற்றி அடைந்த இங்கிலாந்து, 2-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ள இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் இணைந்துள்ளார். அவருக்கு பதிலாக 2-வது டெஸ்டில் இடம் பெற்ற கிறிஸ் வோக்ஸ், சதமடித்து அசத்தினார். இதனால் ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வதில் குழப்பம் நீடிக்கிறது.

Sharing is caring!