ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர்

ஸ்ரீலங்கா மகளிர் கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் காப்பாளர் லங்கா டிசில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் 2020 ஆம் ஆண்டின் இறுதிவரை இந்த பதவியில் இருப்பாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான செயல்திறன் காரணமாக தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஹர்ஷா டி சில்வா நீக்கப்பட்டுள்ள நிலையில‍ேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!