ஹட்டனைச் சேர்ந்தவர் தெற்காசிய போட்டிகளுக்கு தகுதி

தெற்காசிய விளையாட்டு விழாவில் 10,000 மீட்டர் ஓட்டத்தில் இலங்கை சார்பாக பங்கேற்கும் வாய்ப்பை ஹட்டன் புதுக்காடு பகுதியைச் சேர்ந்த கனகேஸ்வரன் சண்முகேஸ்வரன் பெற்றுள்ளார்.

97 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் 10,000 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் அவருக்கு இந்த வாய்ப்புக் கிட்டியது.

97 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறுகின்றன.

இரண்டாம் நாளான இன்று பிற்பகலில் ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டப்போட்டி இடம்பெற்றது.

பந்தயத்தை கனகேஸ்வரன் சண்முகேஸ்வரன் முதல் வீரராக பூர்த்தி செய்தார். போட்டியை அவர் 31 நிமிடங்கள், 046 செக்கன்ட்களில் கடந்தார்.

இந்த வெற்றிக்கு அமைவாக, எதிர்வரும் தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக 10,000 மீட்டர் ஓட்டத்தில் பங்குபற்றும் வாய்ப்பை சண்முகேஸ்வரன் பெற்றுள்ளார்.

Sharing is caring!