ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டரா? கோபத்தில் ஹர்பஜன்

விராட் கோஹ்லி தலைமையிலான இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் டெஸ்ட் தோல்விகள் பரவலாக விமர்சிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கடும் கோபமடைந்துள்ளார்.

ஹர்திக் பாண்டியாவை இனிமேல் ஆல்ரவுண்டர் என அழைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது. 2 வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.

பாண்டியா துடுப்பாட்டத்தில் அதிகம் ரன்களை குவிக்கவில்லை. அவரது பந்துவீச்சின் மீதும் விராட் கோஹ்லிக்கு நம்பிக்கை இருப்பது போல் தெரியவில்லை. அவர் இதே நிலையில் தொடர்ந்து பந்து வீசினால் வருங்காலத்தில் அணியில் தேர்வாவது கடினமாகிவிடும்.
தான்.

இங்கிலாந்து அணி ஆல்ரவுண்டர்கள் போது பாண்டியா செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவரால் அவ்வாறு விளையாட முடியவில்லை. எனவே இனி அவரை ஆல்ரவுண்டர் என அழைக்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!