‘ஹாட்ரிக்’ வாய்ப்பை ‘மிஸ்’ செய்த பும்ரா!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, மான்செஸ்டர் நகரின் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியின் 27 -வது ஓவரை பும்ரா வீசினார்.

அவர் வீசிய முதல் பந்தை எதிர்கொண்ட பிராத்வெயிட், விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச்  கொடுத்து வெளியேறினார். அடுத்த பந்தில் ஃபேபியன் ஆலன் எல்பிடள்யூ முறையில் அவுட் -ஆகி வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ராவுக்கு, உலகக்கோப்பை போட்டியில் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது. இச்சாதனையை நிகழ்த்தும் நோக்கத்துடன் பும்ரா மூன்றாவது பந்தை யார்க்கராக வீசினார். ஆனால், கேமர் ரோச் அந்த பந்தை திறமையாக எதிர்கொண்டார். இதையடுத்து, பும்ராவின் ஹாட்ரிக் சாதனை வாய்ப்பு கைநழுவி போனது.

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் கடைசி ஓவரில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, தொடர்ந்து மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!