11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சுருண்டது இந்தியா!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

இரு அணிகளுக்கு இடையேயான பிங்க் பந்து முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக டிசம்பர் 17ம் தேதி தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்திருந்தது.

விரிதிமான் சாஹா (9), ரவிச்சந்திரன் அஸ்வின் (15) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

டிசம்பர் 18ம் தேதி இரண்டாவது நாள் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி, 11 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களு்ககு சுருண்டது.

பிரித்வி ஷா (0), மயங்க் அகர்வால் (17), புஜாரா (43), விராட் கோஹ்லி (74), ரஹானே (42), ஹனுமா விஹாரி (16), விரிதிமான் சாஹா (9), ரவிச்சந்திரன் அஸ்வின் (15), உமேஷ் யாதவ் (6), முகமது ஷமி (0) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பும்ரா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 4 ரன்கள் எடுத்தார்.

இரண்டாவது நாள் அவுஸ்திரேலியா தரப்பில் பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா தரப்பில் பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கம்மின்ஸ் (3), நாதன் லியோன் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் களமிறங்கி விளையாடி வருகிறது.

Sharing is caring!