11 வருஷத்துக்கு முன்னாடி… நாங்க ரெண்டு பேரும்… கோலி நெகிழ்ச்சி !

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின், முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா -நியூசிலாந்து அணிகள் நாளை மோத உள்ளன.இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இப்போட்டி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் நெகிழ்ச்சியான ஒரு விஷயத்தை நினைவுகூர்ந்தார். அது என்ன விஷயம் என்கிறீர்களா?!.. கோலி நெகிழ்ந்து சொன்ன மேட்டர் இதுதான்:

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் மோத உள்ள இந்திய அணிக்கும் நானும், நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன்னும் கேப்டனாக உள்ளோம். இதேபோன்று, சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2008 -ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியிலும், இந்தியா, நியூசிலாந்தை எதிர்கொண்டது.

அப்போதும் இந்திய அணிக்கு நானும், நியூசிலாந்துக்கு வில்லயன்சன்னும் கேப்டனாக இருந்தோம். அந்தத் தருணத்தை தற்போது நினைத்துப் பார்க்கும்போது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது.

எதிர்காலத்தில் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டன்களாக சந்திப்போம் என அவரோ, நானோ நினைத்திருந்தோம். எங்கள் எண்ணம் தற்போது ஈடேறியுள்ளது. இந்த விஷயத்தை வில்லியம்சன்னிடம் நாளை நிச்சயம் தெரிவிப்பேன் என்று விராட் கோலி கூறினார்.

Sharing is caring!