14வது முறை… கங்குலி, டோனியை அடுத்து கோஹ்லியின் விரும்பத் தகாத மைல்கல்

அகமதாபாதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, இங்கிலாந்தின் லெக் ஸ்பின்னர் ஆதில் ரஷீத்திடம் டக் அவுட் ஆனார்.

இதன் மூலம் அணித்தலைவராக 14வது முறையாக டக் அவுட் ஆகியுள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 2 முறை டக் அவுட் ஆனதால் கங்குலியுடன் இணைந்தார். கங்குலி அணித்தலைவராக 13 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

டோனி கேப்டனாக, 11 முறை டக் அவுட் ஆகியுள்ளார். கபில்தேவ் தன் கரியரில் 10 முறை டக் அவுட் ஆகியுள்ளார். முகமது அசாருதீன் தன் கரியரில் 8 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

ஏற்கெனவே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 முறை டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார் கோஹ்லி.

இப்போது ஆதில் ரஷீத் பந்தை மிட் ஆஃபில் கையில் கொடுத்து விட்டுச் சென்றார். இது அவரது 14 டக் ஆகும்.

Sharing is caring!