1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் அள்ளியது இந்தியா

ஜகார்த்தா:
1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு அடுத்த தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. இந்தோனேஷியாவில் 18-வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் நடைபெற்ற ஆண்கள் 1,500 மீட்டர் ஒட்டத்தில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது.

இந்தியாவின் சார்பில் ஜின்சன் ஜான்சன் தங்கப் பதக்கம் வென்றார். இவர் 3 நிமிடம் 44.72 வினாடிகளில் இலக்கை அடைந்தார்.
மகளிர்க்கான 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில், ஹீமா தாஸ், பூவம்மா ஆகியோரை கொண்ட இந்திய மகளிர் அணி தங்கப்பதக்கத்தை வென்றது. 400 மீ தொடர் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றது.

பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் பி.யு.சித்ரா வெண்கல பதக்கம் வென்றார். இதேபோல் மகளிர் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் சீமாபுனியா வெண்கலம் வென்றார்.
ஆண்கள் ஹாக்கி போட்டியில் மலேசியா இந்தியா அணிகள் மோதின. போட்டியின் இறுதி வரையில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்திருந்தன. போட்டி பெனால்டி ஷூட் அவுட்டிற்கு சென்ற நிலையில் மலேசிய அணி 7-6 என்ற கோல்கணக்கில் இந்திய அணியை வென்றது.

இதுவரை இந்தியா 13 தங்கம் 21 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கங்களுடன் 8-ம் இடத்தில் உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!