19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானை அரை இறுதியில் வீழ்த்திய இலங்கை இறுதிப்போட்டியில் நாளை மறுதினம் (07) இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.

19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் நடைபெறுகிறது.

இதன் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று விளையாடின.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்களைப் பெற்றது.

அணித்தலைவர் நுவனிது பெர்னாண்டோ 129 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகளுடன் 111 ஓட்டங்களைக் குவித்தார்.

பந்து வீச்சில் அப்துல் ரஹ்மான் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

210 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய ஆப்கானிஸ்தான் அணியால் 48 .3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 178 ஓட்டங்களையே பெற முடிந்தது.

பந்து வீச்சில் சசிக டுல்ஷான் 9.3 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

Sharing is caring!