19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் இன்று (05) ஆரம்பமாகின்றது.

தொடரில் 8 நாடுகள் பங்கேற்பதுடன் லீக் சுற்று 2 குழுக்களின் கீழ் நடைபெறுகின்றது.

A குழுவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், குவைத் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

B குழுவில் பங்களாதேஷ், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன.

தொடரின் ஆரம்ப நாளான இன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதல் போட்டியில் இந்தியாவும் குவைத்தும் கொழும்பு சி.சி.சி. மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

மற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானும் நேபாள அணியும் கொழும்பு பீ. சரா ஓவல் மைதானத்தில் விளையாடவுள்ளன.

இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி நேபாள அணிக்கு எதிராக கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நாளை (06) நடைபெறவுள்ளது.

வென்னப்புவ ஜோசப்வாஸ் கல்லூரியின் நிபுன் தனஞ்சய இலங்கை அணியை வழிநடத்துவதும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!