2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

இலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 67 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

306 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி 46.5 ஓவர்களில் 238 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பிரபுக்களுக்கு இணையான பாதுகாப்புடன் கராச்சி மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இது 10 வருடங்களின் பின்னர் கராச்சியில் நடைபெறும் முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியாகும்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் சார்பாக இமாம் உல் ஹக், பகார் ஷமான் ஜோடி முதல் விக்கெட்காக 73 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

இமாம் உல் ஹக் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, பகார் ஷமான் 54 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய பாபர் அசாம் மற்றும் ஹாரிஸ் சொஹைல் ஜோடி 111 ஓட்டங்களைப் பகிர்ந்தது.

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய பாபர் அசாம் சதமடித்தார்.

105 பந்துகளை எதிர்கொண்ட பாபர் அசாம் 4 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகளுடன் 115 ஓட்டங்களையும் ஹாரிஸ் சொஹைல் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.

இப்திகார் அஹமட் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 305 ஓட்டங்களைக் குவித்தது.

பந்துவீச்சில் வனிந்து அசரங்க 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

வெற்றி இலக்கான 306 ஓட்டங்களை நோக்கிப் பதிலளித்தாடக் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை எதிர்நோக்கியது.

சதீர சமரவிக்ரம, அவிஷ்க பெர்னாண்டோ, ஓஷத பெர்னாண்டோ, அணித்தலைவர் லஹிரு திரிமான்ன ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

தனுஷ்க குணதிலக 14 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இலங்கை அணி 10 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு முதல் 5 விக்கெட்களையும் இழந்தது.

Sharing is caring!