2-வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தானை வென்றது ஜிம்பாப்வே

ஆப்கானிஸ்தான்- ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டு டி20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் யுஏஇ-ல் நடந்து வருகிறது. ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றிய நிலையில், முதல் ஒருநாள் போட்டியையும் ஆப்கானிஸ்தான் அணி வென்றது. இந்த நிலையில், நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று, போட்டியில் ஜிம்பாப்வே அணி சமநிலையில் உள்ளது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்து, 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன் எடுத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 179 ரன்னில் சுருண்டது. இதனால், 154 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-1 என ஜிம்பாப்வே சமநிலை வகிக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில், ஜிம்பாப்வே அணியை, ஆப்கானிஸ்தான் 154 ரன்னில் வீழ்த்தியிருந்தது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி, நாளை (13ம் தேதி) ஷார்ஜாவில் நடக்கிறது.

Sharing is caring!