இந்திய வீராங்கனைகள் 2 பேர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி… கஜகஸ்தானில் நடந்த மல்யுத்த ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய வீராங்கனைகள் 2 பேர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

62 கிலோ எடைப் பிரிவின் அரைஇறுதி ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய வீராங்கனை சோனம் மாலிக் சீன வீராங்கனை லாங் ஜியாவிடம் தோல்வியை சந்தித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அதேபோல் 57 கிலோ எடை பிரிவின் இறுதி போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக், மங்கோலிய வீராங்கனை Khongorzul Boldsaikhan னிடம் 4-க்கு 7 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை சந்தித்து வெள்ளி வென்றார். அவர்கள் இருவரும் இறுதி சுற்றுக்கு முன்னேறியதன் முலம் ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றனர்.

Sharing is caring!