200 ரன்களை கடந்து கெத்து காட்டும் வங்கதேசம்

உலகக்கோப்பை தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 200 ரன்களை கடந்துள்ளது.

ஓவலில் தற்போது நடைபெற்று வரும் இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்து வரும் வங்கதேசம் 32 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை கடந்துள்ளது. இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் மொத்தமாக 100 ரன்களை கடக்கவே சிரமப்பட்ட நிலையில், வங்தேசம்  200 ரன்களை கடந்து, சிறப்பாக விளையாடி வருகிறது. அரைசதம் அடித்த ஷகிப் அல் ஹசன் (66), ரஹீம் (64) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இந்த ஜோடிகளை பிரிக்க தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளார்கள் முயற்சித்து வருகின்றனர்.

Sharing is caring!