3வது டி20 போட்டியில் தென் ஆப்ரிக்கா வெற்றி

இந்திய மகளிர் அணியுடனான 3வது டி2ப் போட்டியில், தென் ஆப்ரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது.

இந்தியா 17.5 ஓவரில் 133 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மந்தனா 37, கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் 48, வேதா 23 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். மித்தாலி ராஜ் டக் அவுட்டானார்.

தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ஷப்னிம் இஸ்மாயில் 3.5 ஓவரில் 30 ரன் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார்.அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 34 ரன் எடுத்து வென்றது.

கேப்டன் வான் நியகெர்க் 26, லுவஸ் 41, டு பிரீஸ் 20, டிரையன் 34 ரன் விளாசினர். ஷப்னிம் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்க, 4வது போட்டி செஞ்சுரியனில் நாளை மறுநாள் நடக்கிறது.

Sharing is caring!