3 மாதங்களுக்கு பின் முதல் சர்வதேச கிரிக்கெட் ஆரம்பம்..!! இங்கிலாந்தில் விளையாட பயணமாகும் மேற்கிந்தியத் தீவுகள்..!!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தலுக்கு இடையே 3 மாதங்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக, மேற்கிந்திய தீவுகள் அணி, இங்கிலாந்து செல்லவுள்ளது. இங்கிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக நாளை (புதன்கிழமை) மேற்கிந்திய தீவுகள் அணி, இங்கிலாந்து நோக்கி பயணிக்கவுள்ளது.அங்கு செல்லும் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளனர். அதன்பின்னரே டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளனர். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் ஜூலை 8ஆம் திகதி சௌத்தம்ப்டன் நகரில் ஆரம்பமாகவுள்ளது.இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 16ஆம் திகதியும், மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி ஜூலை 24ஆம் திகதியும் மன்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ளன.
கொரோனா வைரஸ் காரணமாக உலகில் நடைப்பெற்ற அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் தடைப்பட்டன. கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர், நடைபெறவுள்ள முதல் சர்வதேச தொடராக, இந்த டெஸ்ட் தொடர் அமையவுள்ளது.

Sharing is caring!