இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி… இந்திய வீரர்கள் 11 பேரின் விபரம் வெளியானது! தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு

புனே மைதானத்தில் தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 3வது ஒரு நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட் மற்றும் டி-20 தொடரை இழந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில் தொடரின் வெற்றியாளரை தீர்மனிக்கும் 3வது மற்றும் கடைசி போட்டி இன்று புனேயில் தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததால் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது..

இந்திய பிளேயிங் லெவன் விவரம்: ரோகித் சர்மா, ஷிகர் தவான், கோஹ்லி (கேப்டன்), ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, ஷார்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், பிரசீத் கிருஷ்ணா, நடராஜன்.

இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து பிளேயிங் லெவன் விவரம்: ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், டேவிட் மாலன், ஜோஸ் பட்லர் , லியாம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கரன், ஆதில் ரஷீத், ரீஸ் டோப்லி, மார்க் வூட்.

இங்கிலாந்து அணியில் டாம் கரனுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் மார்க் வூட் சேர்க்கப்பட்டுள்ளார்.

Sharing is caring!