6000 ரன்களை கடந்தார் விராட் கோலி

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவிரைவாக 6000 ரன் கடந்த 10-வது இந்திய வீரர் என்ற மைல்கல்லை எட்டினார் விராட் கோலி.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்னில் ஆல்-அவுட்டானது. இன்றைய 2ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தற்போது வரை இந்திய அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களை கடந்துள்ளது. புஜாரா – கோலி களத்தில் உள்ளனர.

கேப்டன் கோலி 25 ரன் கடந்து ஆடி வருகிறார். இதில் 6 ரன் எடுக்கையில், டெஸ்டில் 6000 ரன் மைல்கல்லை கோலி எட்டினார். இதனை எட்டும் 10-வது இந்திய வீரர் கோலி ஆவார். மேலும், அதிவிரைவாக ஆறாயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர்களில் கவாஸ்கருடன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டார். கடந்த டிசம்பர் மாதம் 5000 ரன்களை கோலி கடந்திருந்தார்.

Sharing is caring!