8 வயது சிறுவன்… யோகாவில் அசத்தல்… சிறந்த பிரிட்டன் இந்தியராக தேர்வு

லண்டன் :
சிறந்த பிரிட்டன் இந்தியராக 8 வயது சிறுவன் தேர்வு செய்யப்பட்டுள்ளான்.

பிரிட்டனில் நடைபெற்ற யோகா போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 வயது சிறுவன் இந்த ஆண்டுக்கான சிறந்த பிரிட்டன் இந்தியராக தேர்வு செய்யப்பட்டுள்ளான்.

பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளி சிறுவன் ஈஸ்வர் சர்மா (8) கடந்த மாதம் கனடாவில் நடைபெற்ற ‘உலக மாணவர்கள் விளையாட்டு 2018’-ல் வெற்றி பெற்று பிரிட்டனுக்கு தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்தான்.

துருக்கியில் கடந்த மே மாதம் நடைபெற்ற ஆசிய யோகா சாம்பியன் போட்டிகளிலும் பங்கேற்று தங்கம் வென்றுள்ளான். பிரிட்டனில் நடைபெற்ற 11 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய யோகா போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்றான்.

இந்நிலையில், பிர்மிங்கமில் நடைபெற்ற இளம் சாதனையாளர்களுக்கான 6-வது விருது வழங்கும் விழாவில், இந்த ஆண்டுக்கான பிரிட்டனின் சிறந்த இந்தியராக ஈஸ்வர் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளான்.

பிரிட்டன் முழுதும் 100-க்கும் மேற்பட்ட யோகா போட்டிகளில் பங்கேற்றுள்ள ஈஸ்வர், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிலியிலும், அடுத்த ஆண்டு பிய்ஜிங்கிலும் நடைபெற உள்ள யோகா போட்டிகளில் கலந்துகொள்ள தன்னை தயார் செய்யும் வகையில் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறான்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!