பெல்ஜியம் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பெல்ஜியம் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பெல்ஜியம் – இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இதில் பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21-ஆவது உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதன் முதல் அரையிறுதியில் பிரான்ஸ் அணி, பெல்ஜியத்தை வீழ்த்தியது. இரண்டாவது அரையிறுதியில் குரோஷியா அணி இங்கிலாந்தை வென்றது. இதையடுத்து, அரையிறுதியில் தோல்வியைத் தழுவிய பெல்ஜியம் – இங்கிலாந்து அணிகள், மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இன்று மோதின.இவ்விரு அணிகளுக்கும் இடையிலான லீக் ஆட்டத்திலும் பெல்ஜியமே வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணி 1966ல் சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர், 1990ல் அதிகபட்சமாக 4-ஆவது இடம் பிடித்தது. அதேவேளையில், பெல்ஜியம் அணி அதிகபட்சமாக 1986ம் ஆண்டு மட்டும் 4வது இடம் பிடித்தது. எனவே, வெண்கலப் பதக்கம் வெல்லும் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் வெற்றிபெற, பெல்ஜியம் – இங்கிலாந்து அணிகள் தீவிரம் காட்டின. மாஸ்கோவில் உள்ள லுஸ்கினி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

Sharing is caring!