அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டி

பிர்மிங்ஹாம், மார்ச் 21 – அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியின் இறுதிச்  சுற்றுக்கு முன்னேறியிருக்கும் தேசிய விளையாட்டாளர்  லீ சீ ஜியா (Lee Zii Jia) , அப்போட்டியின் நடப்பு வெற்றியாளரான விக்டர் ஆக்செல்சன்- னுடம் மோதுகின்றார்.

லீ சி ஜியா, அரையிறுதிச் சுற்றில், நெதர்லாந்தின் மார்க் கல்ஜாவ் -வை  21- 13, 21-17 எனும் நேர் செட்களில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

முன்னதாக காலிறுயில், அந்த 22 வயது ஆட்டக்காரர்,  உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் கெந்தோ மொமோத்தாவை  வீழ்த்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.

அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியின் இறுதிச் சுற்றுக்கு லீ சீ ஜியா தகுதி பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இறுதிச் சுற்றுயாட்டம்  உள்நாட்டு நேரப்படி இன்றிரவு மணி 7.00 -க்கு நடைபெறுகிறது.

Sharing is caring!