இலங்கை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக் ராகுல் டிராவிட் செயல்படுவார் என அறிவிப்பு

இலங்கை தொடரில் டிராவிட் பயிற்சியாளர்… இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இங்கிலாந்து தொடருக்காக இந்திய அணியுடன் சென்றுள்ளதால், இலங்கை தொடரில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படுவார் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி அடுத்த மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்கள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்பதால், இலங்கைக்கு எதிரான தொடர்களுக்கு ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி ஜூன் 28 அன்று இலங்கைக்குச் செல்லவுள்ளது . இந்தியா – இலங்கை அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர் , ஜூலை 13 அன்று தொடங்கி , ஜூலை 18 அன்று நிறைவுபெறுகிறது .

டி 20 தொடர் ஜூலை 21 அன்று தொடங்கி , ஜூலை 25 அன்று நிறைவுபெறுகிறது . இலங்கைச் சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தேர்வு செய்யப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இத்தகவலை பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதிபடுத்தியுள்ளார். இலங்கையில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படுவார் என கங்குலி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு இந்தியா ஏ , இந்தியா யு -19 அணிகளின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பணியாற்றியுள்ளார்.

Sharing is caring!