வில்வித்தை- அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்

சீன தைஃபே, தென்கொரியா வீரர்களை வீழ்த்தி வில்வித்தை ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

வில்வித்தை பிரிவில் இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவின் அதானு தாஸ் முதல் சுற்றில் சீன தைஃபே-யின் யு-செங் டெங்கை 6-4 என எளிதில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

2-வது சுற்றில் தென்கொரியாவின் ஜின்யெக் ஓ-வை எதிர்கொண்டார். ஐந்து செட்கள் முடிவில் இருவரும் தலா ஐந்து செட் பாயிண்ட் பெற்று சமநிலை பெற்றனர். இதனால் ஷூட் ஆஃப் பாயிண்ட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அதானு தாஸ் 10 புள்ளிகள் பெற்றார். தென்கொரிய வீரர் 9 புள்ளிகள் பெற்றார்.

இதனால் 6-5 என்ற செட் பாயிண்ட் கணக்கில் அதானு தாஸ் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி பெற்றார். 31-ந்தேதி நடைபெறும் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த டி. ஃப்ருகாவாவை எதிர்கொள்கிறார்.

Sharing is caring!