ஆசஷ் தொடர்: இங்கிலாந்து அணி இன்று அறிவிப்பு

இங்கிலாந்து – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் ஒவ்வொரு ஆண்டும் ஆசஷ் டெஸ்ட் தொடரில் விளையடி வருகிறது. இந்த தொடரை கைப்பற்றுவது இரு நாடுகளுக்கும் கவுரவ பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால் எப்போதுமே இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது.

இந்த ஆண்டின் ஆசஷ் தொடர் வருகிற டிசம்பர் மாதம் 8-ந் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடக்கிறது. இங்கிலாந்து அணி தேர்வு குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சில நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஆசஷ் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்படுகிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த அணியில் 17 முதல் 18 வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறும்போது, ‘ஆசஷ் தொடருக்கான அணியை தேர்வு செய்ய இன்று ஆலோசனை நடத்துகிறோம். தொடரை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. வரும் நாட்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் தற்போது கொரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையில் ஆசஷ் தொடருக்கான அனுமதியை அந்நாட்டு அரசு வழங்க வேண்டும்.

Sharing is caring!