அஸ்வினுக்கு தகுதி இல்லை… ரோகித் சர்மா தான் தகுதியானவர்! கொளுத்தி போடும் இந்திய வீரர்

இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், மேன் ஆப் தி மேட்ச்க்கு தகுதியானவர் ரோகித்சர்மா தான் என்று பிரக்யன் ஓஜா கூறியுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 5 விக்கெட் வீழ்த்தியதோடு, இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தினார்.

இப்படி அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிய அஸ்வினுக்கு மேன் ஆப் தி மேட்ச் விருது கொடுக்கப்பட்டது.

ஆனால், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா நிச்சயமாக மேன் ஆப் தி மேட்ச் விருது ரோஹித் சர்மாவுக்கு தான் கிடைக்க வேண்டும்.

ஏனெனில் சேப்பாக்க மைதானம் முதல்நாள் பேட்ஸ்மேன்களுக்கு பேட்டிங் செய்வதற்கு மிக சிரமமாக இருக்கும்.

அந்த நிலையிலும் மிக சிறப்பாக செயல்பட்டு 169 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்,

இவரின் உதவியால்தான் அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்பட முடிந்தது எனவே மேன் ஆப் தி மேட்ச் க்கு தகுதியானவர் ரோகித்சர்மா தான் அஸ்வின் இல்லை என்று கூறினார்.

Sharing is caring!