முத்தையா முரளிதரனுக்கு அடுத்த இடத்தை பிடித்து சாதனை படைத்த தமிழக வீரர் அஸ்வின்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதி வேகமாக 400 விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ள அஸ்வினுக்கு இலங்கை வீரர் மேத்யூஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆமதாபாத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ஜோப்ரா ஆர்ச்சரின் விக்கெட்டை எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்திய போது அது அவரது 400-வது விக்கெட்டாக அமைந்தது.

அஸ்வின் 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் அதி வேகமாக 400 விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

மேலும் உலகளவில் 400 விக்கெட்டுகளை அதிவேகமாக எட்டிய 2-வது வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார். இலங்கை சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முரளிதரன் 72 டெஸ்டுகளில் இந்த இலக்கை எட்டியதே சாதனையாக இருக்கிறது.

இந்த நிலையில் அஸ்வினின் சாதனையை இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் பாராட்டியுள்ளார்.

இது குறித்து டுவிட்டரில், உங்கள் சாதனைக்கு வாழ்த்துக்கள் அஸ்வின். எந்த பந்து வீச்சாளருக்கும் இது ஒரு சிறந்த மைல்கல் ஆகும் என பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!