பேட்மிண்டன்: டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தி பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 13-ம் நிலை வீராங்கனையை எந்தவித கடினமின்றி 2-0 என வீழ்த்தி இந்தியாவின் பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு நாக்அவுட் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து (தரநிலை 6) டென்மார்க்கின் மியா பிலிசெல்ட்-ஐ (தரநிலை 13) எதிர்கொண்டார்.

இதில் பி.வி. சிந்து 21-15, 21-13 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதியில் கொரியாவின் 12-ம் நிலை வீராங்கனை அல்லது ஜப்பானின் 4-ம் நிலை வீராங்கனையை எதிர்கொள்ள இருக்கிறார்.

Sharing is caring!