இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது பங்களாதேஷ்

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை பங்களாதேஷ் அணி முதன் முறையாக கைப்பற்றியுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி டக்வர்த் லுவிஸ் முறைமை அடிப்படையில் 103 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாடி 48.1 ஓவர்களில் 246 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் டக்வர்த் லூவிஸ் முறையின்படி இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 40 ஓவர்களில் 245 ஒட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

எனினும் இலங்கை அணி 40 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 141 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வி அடைந்தது.

எனவே பங்களாதேஸ் ஏற்கனவே முதலாவது போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியிடன் சேர்த்து இந்த தொடரை 2 -0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Sharing is caring!