ஒரே ஆட்டத்தில் அதிக சிக்ஸர் அடித்த பென் ஸ்டோக்ஸ்.!

இந்திய அணிக்கெதிரான ஆட்டத்தில், 10 சிக்ஸர் அடித்ததன் மூலம் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையை பென்ஸ்டோக்ஸ் பெற்றார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 336 ஓட்டங்களை இங்கிலாந்து அணி அசால்ட்டாக எட்டிப் பிடித்தது.

இங்கிலாந்தி அணி வீரர் பென் ஸ்டோக்ஸ், அதிரடியாக விளையாடி 52 பந்தில் 4 பவுண்டரி, 10 சிக்சருடன் 99 ஓட்டங்கள் குவித்தார்.

இதன் மூலம் ஒரு ஆட்டத்தில் அதிக சிக்சர் அடித்த 3-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பென் ஸ்டோக்ஸ் பெற்றார்.

இயான் மோர்கன் 17 சிக்சர்கள் அடித்து உலக சாதனை படைத்தார். 2019-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் 148 ரன் குவித்தார். பட்லர் 2019-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 12 சிக்சர் அடித்தார்.

குல்தீப் யாதவ் ஓவரில் 8 சிக்சர்கள் விளாசப்பட்டன. இதன் மூலம் அதிக சிக்சர்களை விட்டுக் கொடுத்த 3-வது பவுலர் என்ற மோசமான சாதனையை அவர் பெற்றார். ரஷீத்கான் 11 சிக்சர்களும், மொய்ன் அலி 9 சிக்சர்களும் விட்டுக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!